தோழர் சக்தி மற்றும் கௌசல்யா அவர்களுக்கு அடவு கலைக் குழுவின் சார்பாக திருமண வாழ்த்துக்கள்
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக, ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி கெளசல்யாவிற்கு கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் மறுமணம் நடைபெற்றது.
பறை இசை முழங்கும் சமயத்தில் கௌசல்யா – சக்தி ஆகியோர் திருமண உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சங்கரின் தந்தை வேலுச்சாமி, சங்கரின் இரு இளைய சகோதரர்கள் விக்னேஷ் மற்றும் யுவராஜ் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தம்பதியை வாழ்த்தினர். சங்கரின் பாட்டி மாரியாயி தம்பதிக்கு மாலை எடுத்து கொடுத்தார்.
சாதிய வன்முறைகள் மற்றும் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராகவும், பெண்ணுரிமை செயற்பாட்டாளராகவும் இருந்து வருகிறார் கெளசல்யா.
“சாதி ஒழிப்புக் களத்தில் நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம். ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்றப் போராடுவேன்,” என்று திருமணத்துக்குப் பிறகு கௌசல்யா கூறினார்.