பறை 101

பறை

பறை (தப்பு),  தமிழனின் பாரம்பரிய மரபிசை கருவி. வட்டவடிவ மர சட்டத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத்தோலை இழுத்து ஒட்டி செய்யப்பட்டது.

Parai is a traditional percussion instrument dating back to prehistoric era. It is considered as the mother of all musical instruments. Parai drum is made from a circular wooden frame covered with buffalo skin on one side.

குச்சிகள்

பறை இசைக்க இருவிதமான குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றது

 1. சுண்டுகுச்சி – மூங்கிலால் செதுக்கப்பட்டிருக்கும். சுமார் ஓன்று முதல் ஒன்றே கால் அடி நீளமும், ஒரு செ.மீ. அகலமும் கொண்டிருக்கும்.
 2. அடிக்குச்சி – பூவரசங்கம்பில் செதுக்கப்பட்டிருக்கும்.  சுமார் ஓரு அடி நீளமும், மூன்று செ.மீ சுற்றளவும் கொண்டிருக்கும்.

Parai is played with two sticks:

 1. Sundu Kuchi – A foot long flat bamboo stick used for high pitch sound
 2. Adi Kuchi – A half foot long thick stick used for base notes

பறை இசை

பொதுவாக இடது கையில் சுண்டுகுச்சியை பிடித்துக் கொண்டு பறையின் மேல் பகுதியிலும், வலது கையில் அடிக்குச்சியை பிடித்துக் கொண்டு பறையின் கீழ் பகுதியிலும் அடித்து பறையை இசைப்பர்.

சொற்கட்டுகள்

 1. த – சுண்டுகுச்சியை மட்டும் பறையின் மேல் பகுதியில் அடித்து எழுப்பப்படும் இசை
 2. கு – அடிக்குச்சியை மட்டும் பறையின் கீழ் பகுதியில் அடித்து எழுப்பப்படும் இசை
 3. தீம் – சுண்டுகுச்சி மற்றும் அடிக்குச்சி இரண்டையும் ஒரே நேரத்தில் பறையில் அடித்து எழுப்பப்படும் இசை

பயிற்சிக்கான அடிப்படை சொற்கட்டுகள்

 1. கு
 2. தீம்
 3. தகு
 4. தகுகு . தகு
 5. தகுகு . தகுகு . தகு
 6. தீம்-கு . தகுகு . தகுகு . தகு

Leave a Reply